Monday, 21 November 2011

சரிவர்லேன்னா மொகரக்கட்டயிலேர்ந்து கழிட்டிக்கி.

கும்புடுறோம் சன‌ங்களே!
இம்மாம்பேரு என் மொகரக்கட்டயில தோஸ்தாகிக்கீரிங்க. வாஸ்தவந்தான். என்னப்பத்தி ஒங்குளுக்குத் தெரியும். கரிக்டாகீனும், கரிக்டா பேசிக்கினும். நானும் அப்புடித்தான். நம்ம ஆண்டவர் சொல்லலயா. நான் உண்மையுள்ளவரயிருக்குறது போல நீங்களும் உண்மையுள்ளவராயிருங்கள்னாரு. அத்த மனசுல வச்சுக்குனுதான் நான் கரிக்டா பேசுரேன். என் விமர்சனத்த ஏத்துக்க. அது தான் உன் வளர்ச்சிக்கு நல்லது. அப்பத்தன் எனுக்கு நீ நண்பரா இருக்க முடியும். அத்த வுட்டுட்டு என் மொகரக்கட்டயில தோஸ்தாயிருந்துகினு நான் விமர்சனம் பண்ணா கோயிச்சிக்காதீங்க‌ தலித் கிறிஸ்டியன் தியாலஜி கண்ணு. சரிவர்லேன்னா மொகரக்கட்டயிலேர்ந்து கழிட்டிக்கி. எனுக்கு எம்மாம்பேரு தோஸ்துங்குறது முக்கியமில்ல. ஆண்டவருக்கு வெறும் பன்னென்டு பேர் தான் சீஷருங்க. நமுக்கும் அது போதும். வந்த மாட்டையும் கட்ட மாட்டேன். போன மாட்டையும் தேட மாட்டேன். அது தலித் விடுதலைக்கு ஆவாது கண்ணு. கரிக்டா? கரிக்டு.
கும்புட்டுக்கிறேன்.

No comments:

Post a Comment