சேரிப்பிணந்திண்ணும் தலித் கிறித்துவப் பார்ப்பனியம்
தலித் என்றவுடனே எல்லா தலித்தையும் ஒரே குடைக்குள் பார்க்கும் பொத்தாம் பொதுவான மாயக்கண்ணாடியைக் கழற்றும் நேரம் வந்துவிட்டது. என்னுடைய முகநூலில் தலித் கிறிஸ்டியன் தியாலஜி என்கிற பெயரில் இணைந்திருந்த தலித் கருத்தியல் தெளிவற்ற நண்பர்களின் விவாதக் குழப்பத்தை தீர்ப்பதும் இப்போதைய காலக்கட்டாயம். தலித் கிறிஸ்டியன் தியாலஜி முகநூலை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவர்கள் முன் வைக்கும் தலித் விடுதலைக்கான கருத்தியல் போகிற போக்கில் அள்ளித் தெளிப்பதாக இருக்கிறது. அதில் மிக முக்கியமானது அண்மையில் விவாதம் செய்துவிட்டு சட்டென துண்டிதுக்கொண்ட ஒரு யார் தலித் பார்ப்பனர் என்கிற விவாதம்.
சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் தலித்துகள் யாரெல்லாம் அப்பர் கிளாசுக்கு உயர்ந்து விட்டார்களோ அவர்கள் தான் தலித் பிரமணர்கள் என்று கருத்துரைக்கின்றனர். இந்த விவாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல என்பது என் கருத்து. சாதியும், தீண்டாமைக் கொடுமைகளும் தலித்துகளுக்கு காலம் காலமாக இருக்கவில்லை. அது இடையில் திணிக்கப்பட்டது என்பதை எப்போதும் தலித் கிறித்துவ இறையியலாளர்கள் ஏற்பதில்லை. காரணம் அம்பேத்கரின் ஆய்வுகளை முழுமையாக படிக்காமல், விடுதலை இறையியல் பாதிப்பில் மயக்கமடைந்து, உலகத் தோற்ற முதல் அடிக்கப்படுகிற ஆட்டுக்குட்டியாக, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, உடைக்கப்பட்ட, கிழிக்கப்பட்ட, வேர்பிடுங்கப்பட்ட உச் கொட்டும் இரக்க மனோபவத்துடன் தலித்துகளைப் பார்க்கிறார்கள். சாதியும், தீண்டாமைக் கொடுமைகளும் தலித்துகளை ஆட்கொள்வதற்கு முன், தலித்துகள் இந்த மானுடத்தில் அழகானவர்களாக, இந்த மானுடத்தை உருவாக்கியவர்களாக, மலையை, மடுவை படைப்பாக்கம் செய்த சமத்துவ அழகியலின் சொந்தக்காரர்களாக, நீதிக்கான ஆன்மிகத்தையும், இறையாண்மையையும் அதற்கான வரலாற்றைக் கட்டிக்காத்தவர்களாக இருந்தார்கள் என்கிற வரலாற்றையே மறைத்து விட்டார்கள். சாதி ஆதிக்கத்துக்கு முந்தைய தலித்துகளைப் பார்க்காமல், தலித்துகள் ஏதோ வாழ்விழந்தவர்களாக, கடவுளுடைய படைப்பிலிருந்தே ஒடுக்கப்பட்டவர்களாக, சிலுவையில் தொங்கும் இயேசுவைப்போல் கைவிடப்பட்டவர்களாக, திக்கற்றவர்களாக, இவர்களுக்காக சூடொ தலித் கிறித்துவர்களாகிய நாம் தான் வருத்தப்பட்டு பாரம் சுமந்து விடுதலை வாங்கித்தர வேண்டும், தலித்துகளை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என இரக்கப்படுகிறது போல ஒரு கசாப் கடை தலித் அபிமானம் சூடோ தலித் கிறித்துவ இறையியலாளர்களிடம் மேலோங்கி இருக்கின்றது. உண்மையான தலித் இறையியல் எழுச்சியடையாமல் போனதுக்கு இத்தகைய சூடோ தலித்தியப் பார்வை ஒரு காரணம்.
ஆனால் கடந்த நூறாண்டுகளில் சமூக, பொருளாதார தளத்தில் தலித்துகள் எவ்வாறு வளமாக இருந்தார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். 1885 -ல் ரங்கூன் நகராட்சியின் ஆணையராக இருந்த மதுரைப்பிள்ளை என்பவர் முதன் முதலாக வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு முன்பே கப்பலோட்டிய தலித். எல்.சி.குருசாமி, பண்டிதர் அயோத்திதாசர், மீனாம்பாள் சிவராஜ், எம்.சி.ராஜா, தேக்கம்பட்டி பாலசுந்தரம் போன்றோரெல்லாம் அரசியலில் மட்டுமல்ல சமூக, பொருளாதாரக் கட்டமைப்பிலும் நன்றாக வளர்ச்சியடைந்தவர்கள். புரட்சியாளர் அம்பேத்கரையோ, சுவாமி சகஜானந்தனாரையோ, ஜோதிபா பூலேவையோ, அய்யன்காளியையோ, வெறுமனே தீண்டாமை அனுபவித்தார்கள் என்பதற்காக பாமர ஏழைகள் என்று சொல்லிவிட முடியாது. வளமாக இருந்தார்கள் என்பதற்காக இவர்களை எல்லாம் தலித் பார்ப்பனர்கள் என்று சொல்லிவிட முடியுமா? இவர்கள் எல்லாம் தலித் கிறித்துவர்கள் இல்லை என்பதனாலா?
அப்படியானால் எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடலாம். தலித்துகள் யாரெல்லாம் வளமாக வாழ்ந்தார்களோ, முன்னேறி வசதிக்கு வருகிறார்களோ அவர்களை தலித் பார்ப்பனர்கள் என பட்டம் கட்டுவது தான் சூடோ தலித்திய குணம். அவர்களுக்கு பொருளாதார, சமூக வளர்ச்சி வேண்டாம் என்கிறார்கள். அப்படியானால் அவர்களுக்கு நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன்.
அவர்களுக்காவது அன்றாடம் உழைத்து முன்னேறிய ஒரு பொருளியல் அனுபவம் இருக்கிறது. வேலை வாய்ப்பில் இருக்கிற தலித் கிறித்துவர்களைத் தவிர, அதிகார மட்டத்தில் கோலோச்சும் சூடோ தலித் கிறித்துவர்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து இன்றைக்கு ஒரு வெள்ளை அறிக்கை தர முடியுமா? இன்றைக்கு கிறித்துவ நிறுவனங்கள் மற்றும் திருச்சபைகளின் அதிகார மட்டத்தில் சப்ளாங்கோல் போட்டு உட்கார்ந்து கொண்டு, தலைமுறை தலைமுறையாக தாங்கள் மட்டுமே தலித் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, உழைக்கும் பாமர தலித்துகளின் பெயரால், ஒட்டு மொத்த தலித் கிறித்துவ தலித் ஒதுக்கீடுகளையும் தாங்களே அநுபவித்துக் கொண்டு, அகில உலகக் கிறித்துவ முதலாளிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, மிக மிக வளமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற தாங்கள் யார்? உழைக்கும் தலித்துகளை ஏகாதிபத்தியவாதிகளிடம் காட்டிக்கொடுத்து, கூட்டிக்கொடுத்து, ஆண்டாண்டு காலமாக கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் எல்லா நலன்களையும் உழைக்கும் பாமர தலித்துகள் பெயரால், ஏகபோகமாக சுரண்டப்பட்டு வளமாக இருக்கிற தாங்கள் தலித் பார்ப்பனர் இல்லையென்றால் எதற்காக தலித் கிறித்துவ இட ஒதுக்கீட்டுக்காக நீங்கள் போராடுகிறீர்கள்? அந்த போராட்டத்துக்கு ஏன் ஒன்றும் அறியாத அப்பாவி தலித்துகள் ஆதரவு தர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டிலும் இன்னும் சுகம் காண வேண்டும் என்கிற நப்பாசையா இதையெல்லாம் எந்த தலித்துகளும் நம்பத்தயாராக இல்லை என்பதை இனியாவது சூடோ தலித் கிறித்துவர்கள் உணர வேண்டும். பொத்தாம் பொதுவாக தலித் கிறித்துவர் என்று பேசுவதை தவிர்த்து விட்டு தாங்கள் சூடோ தலித் கிறித்துவர் என்பதை பாவ அறிக்கையாக ஏறெடுக்க வேண்டும்.
யாரெல்லாம் உழைக்கும் பாமர தலித்துகளைச் சுரண்டிக் கொழுக்கின்றார்களோ! யாரெல்லாம் உழைக்கும் பாமர தலித்துகளைக் காட்டிக் கொடுத்து வாழ்கிறார்களோ! யாரெல்லாம் உழைக்கும் பாமர தலித்துகளை அடகு வைத்து, பணயம் வைத்து, அவர்களின் பண்பாட்டுக் கருத்தியலைக் களவாடி, சேரியில் எரியும் பிணங்களின் வெளிச்சத்திலும், வெப்பத்திலும் கஞ்சி காய்ச்சிக் குடித்துக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களே தலித் பார்ப்பனர்கள். அவர்களே சூடோ தலித் கிறித்துவர்கள்.

No comments:
Post a Comment